ஃபக்கர் ஸமான்…..Fast and Furious

ஃபக்கர் ஸமான்…..Fast and Furious
“”””””””””””””””””””””””””””””””””””””””””””
யார் வெல்கின்றார் யார் தோற்கின்றார் என்பதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்…………………. கிரிக்கெட் என்பது ஒரு கொண்டாட்டம்…கிரிக்கெட் என்பது ஒரு கார்னிவெல்……………..கிரிக்கெட் ஒரு குதூகலம்..கிரிக்கெட் ஒரு கும்பமேளா….கொண்டாடித் தீர்க்கின்ற குற்றால அருவியது.

நேற்றைய (2021-04-04) தினம் பாக்கிஸ்தான் தென்னாபிரிக்காவுக்கிடையில் தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேகின் த வொன்டரெர்ஸ் மைதானத்தில் இடம் பெற்ற மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாம் ஆட்டத்தின் போது பாக்கிஸ்தான் தோற்றது தென்னாபிர்ககா வென்றது என்பதற்கப்பால் அநத முழு மேட்சையும் நான் கொண்டாடித் தீர்க்கின்ற மனோ நியைில்தான் இருந்தேன்.

அதற்கான அடிப்படைக் காரணம் பாக்கிஸ்தானின் ஓப்பனிங் பேட்டிங் மூர்க்கன் பக்கர் ஸமானின் அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே பேயாட்டம்.

அண்மைக் காலமாக ஃபோர்முக்காக சற்று போராடிக் கொண்டிருந்த ஃபக்கர் சமான் நேற்றைய ஆட்டத்தின் போது கடைசி ஓவர் வரை காட்டியதெல்லாம் வெறித்தனமான விஸ்வரூபம் தவிர வேறென்னவாக இருக்க முடியும். இதோ வந்துட்டேன்யா..என்னோட இயல்பான அதே பழைய ஸ்டைலை தூசு தட்டி இத்தோ மறுபடி பிட்ச்சுக்கு பெட்டோடு வந்துட்டேன்யா என்ற கோஷத்தோடு மைதானத்தின் நாலா பக்கமும் அந்தப் பையன் துடுப்பினை சுழற்றி சுழற்றி தென்னாபிரிக்கா பந்து வீச்சாளர்களை கதற விட்டதெல்லாம் வரலாறாக மாறி விட்டிருக்கின்றது இப்போது.

தென்னாபிரிக்காவின் 341 என்கின்ற ஜப்பான் சுமோ வீரர்களின் உடம்பைப் போன்ற இலக்கோடு தமது ஆட்டத்தை ஆரம்பித்த பாக்கிஸ்தான் தமது விக்கெட்டுகளை தாரை வார்ப்பதில் தாராளப் பிரபுக்களாகி ஒரு கட்டத்தில் 120 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என்று ஆன போது பிட்ச்சில் பக்கர் சமானோடு பின்னைய வீர்ர் ஆஸிப் அலி நின்று கொண்டிருந்தார். பாபர் அசாம் உட்பட அத்தனை முன்னணி வீர்ரகளும் பெக் ட்டூ பெவிலியனாகி பெஞ்சில் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார்கள். இத்தோடு பாக்கிஸ்தானின் சேசிங் துடுப்பாட்டம் சலவாத்தோடு இனிதே முடிந்தது தென்னாபிரக்கா மிகப் பெரிய மார்ஜினால் ஜெயம் கொண்டார்க்ள என்று நினைத்து வெறுத்துப் போன போதுதான் அந்த மெஜிக் நடந்தது.

ஆரம்பத்தில் ஸ்ட்ரைக் ரேட்டை கீழ் மட்டத்தில் ரொட்டேட் செய்து தனது விக்கெட்டினை அபாரமாக பந்து வீசிக் கொண்டிருந்த நோட்ஜே போன்றோரிடம் பறி கொடுத்து விடாது பாதுகாத்து விளையாடி வந்த பக்கர் சமானின் வெறியாட்டத்தில் நான் ஐம்பதாவது ஓவர் வரை பார்த்ததெல்லாம் ஃபாஸ்ட் என்ட் பியூரியஸ் தவிர வேறென்ன.. மனதை திருடி விட்டாய் படத்தில் வடிவேலுவுக்கு காதில் ரத்தம் வருகின்ற மாதிரி மிக மோசமான கெட்ட வார்த்தை கொண்டு ஏசிய காயத்ரி ஜெயராமன் பிரபுதேவாவுக்கும் அதே மாதிரி ஏசுகின்ற போது வெளியேயிருந்து ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்ற வடிவேலு “அதே கெட்ட வாரத்தை…….பாரபட்சம் பார்க்காமல் திட்டுகின்றாள்” என்பாரே அந்த மாதிரியிருந்தது.

பாராபட்சம் பாக்காமல் லுங்கி இங்கிடி அன்டிலே ஃபெஹலுகன்வாயோ நோர்ட்ஜே ஷம்ஸி என்று அத்தனை பந்து வீச்சாளர்களையும் ஹை டெஸிபலில் கதற விட்டார் பக்கர் சமான். கடைசி ஓவர் வரை தனியாக நின்று போராடிக் கொண்டிருந்த பக்கரின் பெட்டிங் ஸ்னைப்பரில் நேற்றைய மேட்ச் பக்கர் ஸமான் சமான் வேர்செஸ் தென்னாபிரிக்கா என்று கன்வேர்ட் ஆனது. உடலில் பலமிருக்கு மட்டும் கடைசி வரை போராடுவேன் என் அணியை வெற்றியின் பால் அழைத்துச் செல்வேன் என்று துடுப்பாட்டத்தால் கிரிக்கெட் யுத்தம் செய்து கொண்டிருந்த பக்கரின் அந்த தன்னம்பிக்கை பாக்கிஸ்தானின் தோல்வியைக் கூட கௌவரமான கொண்டாட்டமாக மாற்றியிருந்தது என்பதுதான் உண்மை.

155 பந்துகளுக்கு மொத்தமாக 193 ஓட்டங்கள். இதில் 18 நான்குகளும் 10 ஆறுகளும். பெரும் இலக்கினை துரத்திக் கொண்டு பந்து வீச்சாளர்களை கதற விடுவதெல்லாம் வேற லெவல் ப்ரோ. பாக்கிஸ்தானின் வெற்றியை விட நான் மிகக் கடுமையாக எதிர் பாரத்துக் கொண்டிருந்தது பக்கரின் இரு நூறைத்தான். ஆனால் கடைசி ஓவரில் குயின்டன் டீ கொக் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்து நொன் ஸ்ட்ரைக்கர் முனைக்கு பவுமா பந்தை தூக்கி வீசுவது போல பாவ்லா காட்டி பக்கரை முட்டாளடித்து அவரை குழப்பி விட்டு கடைசியாக பக்கரை ரன் அவுட் செய்திருக்கா விட்டால் டபள் டன் என்கின்ற கணக்கோடு பக்கர் சுல்தான் த வேரியராக பெவிலியன் சென்றிருப்பார்.

குயின்டன் டீ கொக் நீங்கள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு பக்கா ஜென்டில்மேன் கிரிக்கெட்டர் ஆச்சே…ஐசீசீ விதிகளுக்கு முரணாக எப்படி இதனை நீங்கள் செய்தீர்க்ள. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது இயல்பாக நடந்ததா…ஆனால் எது எப்படியோ பக்கர் அந்த இரு நூறுக்கு நூறு சத வீதம் தகுதியாக இருந்த நிலையில் நீங்கள் செய்தது பக்கா பிராடுத்தனம் குயின்டைன். இது ஜென்டில்மேன் கேமுக்கு கொஞ்சம் கூட பொறுந்தாத நடத்தையச்சே ராசா. இனிமேல் கிரிக்கெட் வரலாறு உங்களை பார்க்கும் பெதெல்லாம் பக்கரை முட்டாளடித்து ரன் அவுட்டாக்கியதனையே மறு படி மறுபடி ரீ டெலிக்காஸ்ட் பண்ணி த்ரோ பெக் மெமரீஸ் செய்யுமே கண்ணா…என்ன செய்யலாம்.

சம காலத்தைய ஒரு நாள் போட்டிகள் டீடுவன்டி ஆட்டங்கள் இரண்டு ஃபோர்மெட்டுக்குமே ஒரு துடுப்பாட்ட வீரனுக்கு இருக்க வேண்டிய அடிப்’படை அமச்ம் எதுவென்று என்னைக் கேட்டால் அது Aggression என்றுதான் உடன் பதில் சொல்வேன். அந்த Aggression உடன் Consistency. கோலி பென் ஸ்டொக்ஸ் பாபார் அஸாம் போன்றோர்களிடத்தில் இந்த இரண்டையும் சரி சமனாக நான் காண்கின்றேன். பக்கரிடம் எப்போதுமே அவரது ஸ்டைல் இந்த Aggressionதான். Aggression னை மாத்திரம் கவனத்திற கொள்வதனால் அவரிடம் அவ்வப்போது காணாமற் போய் விடுகின்றது Consistency. Aggression உடனான Consistency யினை பக்கர் கவனித்திற் கொள்வாரானால் அற்புதாமான ஒரு நாள் ஆட்டக்கரானாக அவர் மாறுவார் என்பதில் சந்தேகமே கிடையாது.

என்றைக்கும் மறக்க முடியாத படி ஒரு அற்புதமான இன்னிங்சை தந்து கடைசி பந்து வரை நுனிக் கதிரையில் என்னைப் போன்ற கிரிக்கெட் வெறியர்கனை உட்கார வைத்து விட்டு ஜஸ்ட் அந்த ஏழு ஓட்டங்’களால் டபள் சென்ச்சரியை அடையாமற் போன One Man Army ஃபக்கருக்கு எனது மெகா சல்யூட்..

நீ கலக்கு அப்பு.

கிண்ணியா சபருள்ளாஹ்
2021-04-05