ஃபேபியன் அலென் நிகழ்த்திய அசரவைக்கும் ஒற்றைக்கை பிடியெடுப்பு (வீடியோ இணைப்பு )

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

ஐந்தாவதும் முக்கியமானதுமான இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்று தொடரை 4-1 என தன்வசப்படுத்திக் கொண்டது.

இந்த போட்டியில் மிரளவைக்கும் களத்தடுப்புத்திறனை மேற்கிந்திய தீவுகளில் களத்தடுப்பாட்ட வீரர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இனறைய நாளில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பின்ச் இனுடைய பிடியெடுப்பை நிகழ்த்திய விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

ஒற்றை கையால் ஓடிவந்து மிரளவைக்கும் பிடியெடுப்பை ஃபேபியன் அலென் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.

உலகக்கிண்ண T20 போட்டிகள் வருகின்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி டி20 போட்டிகளில் ஆதிக்கம் நிறைந்த அணியாக தன்னை நிலைநிறுத்திக் இருக்கின்றமை ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்புகளை தோற்றுவித்திருக்கிறது.

வீடியோ இணைப்பு ???

கடந்த நான்காவது டுவென்டி டுவென்டி போட்டியின்போது எல்லை கோட்டருகில் இருந்து தடுத்து பந்தை அருமையாக ஃபேபியன் அலென் பிடியாக்கி ஆட்டமிழக்கச் செய்திருந்தா என்பதும் இங்கே நினைவுபடுத்ததக்கது.

மொத்தத்தில் இந்தத் தொடரில் மிகச் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களுள் ஒருவராக ஃபேபியன் அலென் தன்னை நிரூபித்திருக்கிறார்.

நான்காவது போட்டியின்போது அலன் நிகழ்த்திய பிடியெடுப்பு ???

இரு பிடியெடுப்பக்களும் அரோன் பின்ச் உடையது என்பதும் கவனிக்கத்தக்கது.