அகில இலங்கை பாடசாலை மட்ட குத்துச்சண்டை போட்டியில் நு/பரிசுதத திரித்துவ கல்லூரி வரலாற்று சாதனை!

அகில இலங்கை பாடசாலை மட்ட குத்துச்சண்டை போட்டியில் நு/பரிசுதத திரித்துவ கல்லூரி வரலாற்று சாதனை!

அகில இலங்கை பாடசாலை மட்ட எல்.வி.ஜயவீர ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டி (2023) இம்முறை கந்தலாய் நகரசபை மண்டபத்தில் இம்மாதம் 9ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடைபெற்று வந்தது.

இதில் நாடெங்கிலும் உள்ள சுமார் 100 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 400 பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர்.

இப்போட்டியில் நு/பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியை பிரதிநித்துவப்படுத்தி 07 மாணவர்கள் வெவ்வேறு வயதுபிரிவிலும் எடைப்பிரிவிலும் பங்குபற்றிய நிலையில் அவர்களில் 04 வீரர்கள் தங்களின் அபார திறமையைக்காட்டி அறையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகினர்.

அவ்வெற்றி வீரர்களின்‌ வெற்றி விபரம் இதோ 👇

இறுதிபோட்டியில் எமது பாடசாலையை பிரதிநிதித்துவப்டுத்தி பங்குபற்றிய எஸ். திலக்சன் (தரம்-11) கடுகண்ணாவ தேசிய பாடசாலை மாணவன் ஏ.எம்.ஏ. பியதிச்ச என்ற மாணவனுடன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்து ஓர் வரலாற்று சாதனையைப்படைத்துள்ளார்.

‌ மேலும் சி.யுவேந்திரன் அறையிறுதி போட்டியில் போட்டியிட்டு 03ம் இடத்தைப்பெற்று வெண்கல பதக்கத்தை சுவீகரித்துள்ளார்!

அத்தோடு .பி.அபினாஸ் (தரம் 12) 03ம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

மேலும் பி.கிஷான்.(தரம் 12) என்ற மாணவன் 03ம் இடத்தைப்பெற்று வெண்கல பதக்கத்தை சுவிகரித்துள்ளார்.

குறிப்பாக எமது பாடசாலையில் இருந்து தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஆண்கள் பிரிவில் போட்டியிட்டு மொத்தமாக 04 பதக்கங்கைளை வென்றது இதுவே முதன்முறை!

01 வெள்ளி, 03 வெண்கலமும் என நான்கு பதக்கங்களை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் பெருமையோடு எழுந்த நிற்கிறது எமது பாடசாலை…! இவ்வாறானதொரு வரலாற்று வெற்றி நுவரெலியா,பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரிக்கு மட்டுமல்ல நுவரெலியா மாவட்டத்துக்கே இது முதல் வெற்றியாக அமைகிறது.

இவ்வெற்றிக்கு தன்னையே அற்பணித்து உழைத்து கடின பயிற்சி பெற்ற வெற்றியாளன் எஸ்.திலக்ஸனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள், மேலும் வெண்கல பதக்கங்களை வென்ற சி.யுவேந்திரன்,பி.அபினாஸ்,பி‌.கிஷான் ஆகிய வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாவதாக!

அத்தோடு பங்குபற்றிய பாடசாலைகள் பெற்றுக்கொண்ட பதக்கங்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியலில் எமது பாடசாலை 01 வெள்ளி மற்றும் 03 வெண்கல பதக்கங்களை பெற்று அகில இலங்கை ரீதியில் 20 வது (Rank) நிலையை அடைந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!

இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய எமது கல்லூரியின் அதிபரும் நுவரெலியா குத்துச்சண்டை சம்மேளனத்தின் உபதலைவர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு அம்மாணவர்களின் குத்துச்சண்டை பயிற்சியாளன்‌ என்ற வகையில் மனதார நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்… பாடசாலை வளாகத்தில் குத்துச்சண்டை பயிற்சியை ஆரம்பித்தது முதற்கொண்டு எல்லா வித உதவிகளையும்‌ ஒத்துழைப்புகளையும் வழங்கிவருகின்றார்,அத்தோடு குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்கும் மற்றும் செயலமர்வுகளுக்கு அனுப்பிவைத்தல், குத்துச்சண்டை பயிற்சி‌மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கியது வரையான எல்லாவித ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகிறார்…அவருக்கு எனது மானமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்! அத்தோடு ஆசிரியரைகளை உற்சாக படுத்துவதிலும், அவர்களுக்கு உற்சாகமூட்டுவதிலும், அவர்களின் தேவைகளை அறிந்து செயற்படுவதில் எமது பாடசாலை அதிபர் முதன்மையானவர்.

மேலும் நுவரெலியா கல்வி வலயத்தில் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பான பணிப்பாளரும், முன்னால் கண்டி,வித்தியார்த்த கல்லூரியின் குத்துச்சண்டை பயிற்சியாளரும், சர்வதேச (3 ஸ்டார்) தர நடுவரும் அகில இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டை கண்காணிப்பாளரும் நுவரெலியா மாவட்ட குத்துச்சண்டை சம்மேளனத்தின் காப்பாளருமான திரு.சுசந்த வீரசேன அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்…இவர் இல்லையானால் நான் இங்கு இல்லை காரணம் என்னை முதன் முதல் குத்துச்சண்டை பயிற்சிக்கு அழைத்து பயிற்சியை வழங்கி அத்தனை ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கபடுத்தி வழிகாட்டிய திரு.சுசந்த வீரசேன சேர் அவர்களைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எமது பாடசாலையின் உபஅதிபர்கள்- திரு.திருச்செல்வம் சேர் ,அ.பொன்மலர் டீச்சர் அவர்களுக்கும் மற்றும் பகுதி தலைவர்கள் மற்றும் அம்மாணவர்களின் வகுப்பாசிரியர்கள், ஏனைய ஆசிரியர்களுக்கும் மற்றும் அம்மாணவர்களின் பெற்றோர்கள், ‘இன்டரெக்ட்- க்லப்’ அமைப்பிருக்கும் மற்றும் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் கந்தலாயில் எமக்கு உணவு ஏற்பாடுகளை செய்து உதவிய திரு.எம்.மன்சூர் சேர்(புள்ளிப் பொத்தானை) அவர்களுக்கும் மற்றும் அதிபர் திரு. இந்திரன் சேர் (கதிராவெளி) அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறானதொரு வரலாற்று வெற்றிக்கு காரணமாக அமைந்த அத்துணைப்பேருக்கும் மீண்டும்‌ ஒரு ‌முறை எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தகவல்-பாடசாலை நிர்வாகம்