அசத்தல் வெற்றியுடன் உலககிண்ணத்தை ஆரம்பித்தது இலங்கை..!

அசத்தல் வெற்றியுடன் உலககிண்ணத்தை ஆரம்பித்தது இலங்கை..!

2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்த முதல் வார்ம் அப் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு 34 ரன்களை சௌமியா சர்க்கார் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் துஷ்மந்த சமீர 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலக்கை துரத்திய இலங்கை, மத்திய ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்தது, 75/6 என்ற நிலையில் சிக்கலில் தவித்தது. பின்னர் அவிஷ்க பெர்னாண்டோவுடன் இணைந்த சாமிக கருணார்த்ன இலங்கை அணியைக் காப்பாற்றினார்.

இவர்களின் பிரிக்கப்படாத இணைப்பாட்டம் ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் இலங்கையை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. அவிஷ்க அதிகபட்சமாக 62 ரன்களும், சாமிகா 29 ரன்களும் எடுத்தனர்.

2 வது வார்ம் அப் போட்டி 15 ஆம் தேதி பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக இலங்கை விளையாடவுள்ளது.

19 ஓவர்களுக்குப் பிறகு இலங்கை 148-6

குசல் ஜனித் 04

பாத்தும் நிசங்க 15

தினேஷ் சந்திமால் 13

பானுக ராஜபக்ஷ 00

வனிந்து ஹசரங்க 07

தாசுன் ஷனக 07

அவிஷ்க பெர்னாண்டோ 62*

சாமிக கருணாரத்ன 29*