இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசோக் டிண்டா, அனைத்து வகையான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
40 வயதான டிண்டா, இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்களையும், 9 T20 போட்டிகளில் பங்கேற்று 9 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளதுடன், IPL போட்டிகளில் 78 போட்டிகளில் விளையாடி ஓவருக்கு 8.20 எனும் அடிப்படையில் விட்டுக்கொடுத்து 69 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
டிண்டா மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் பெருமளவில் பேசப்படாவிட்டாலும் இந்தியாவின் முதல்தர போட்டிகளில் பெங்கல் அணிக்காக 116 போட்டிகளில் பங்கேற்று 420 விக்கெட்களை அள்ளியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.