அஜிங்க்யா ரஹானேயின் வாழ்க்கையை மாற்றிப்போட்ட டிராவிட் சொன்ன முக்கிய அறிவுரை என்ன தெரியுமா ?

இந்தியா தேசிய அணியில் அழைப்பைப் பெறுவதற்கு முன்பு உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் சாதித்தவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் உதவித்தலைவர் அஜிங்க்யா ரஹானேக்கு , ராகுல் டிராவிடின் ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கியதை அவர் நினைவு கூர்ந்தார், அது அவருக்கு உந்துதல் மற்றும் உத்வேகம் அளித்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

சவுத்தாம்ப்டனில் நியூசிலாந்திற்கு எதிரான முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடத் தயாராகி வரும் இந்திய டெஸ்ட் அணியின் ஒரு பகுதியாக தற்போது இங்கிலாந்தில் இருக்கும் ரஹானே, 2008 இல் நடந்த துலீப் டிராபி இறுதிப் போட்டியின் போது டிராவிட் உடனான தனது தொடர்புகளைப் பகிர்ந்து கொண்டார்.


ரஹானே மேற்கு மண்டலத்திற்காக விளையாடிக் கொண்டிருந்தபோது, டிராவிட் தென் மண்டலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஒரு துலீப் டிராபி இறுதிப் போட்டியில் நான் நினைவில் வைத்திருக்கிறேன், நாங்கள் 2008-09ல் தென் மண்டலத்திற்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தோம், ராகுல் டிராவிட் சென்னையில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த ஆட்டத்தில் எனக்கு ரன்கள் கிடைத்தன – 165 மற்றும் 98. ராகுல் போட்டிக்குப் பிறகு என்னை அழைத்து கூறினார் , நான் உங்களைப் பற்றி நிறைய படித்திருக்கிறேன், நீங்கள் நிறைய ரன்கள் எடுத்திருக்கிறீர்கள். ஒரு வீரராக, நீங்கள் இந்தியாவின் தேசிய அணிக்கு அழைப்பை எதிர்பார்க்கத் தொடங்குவது மிகவும் இயல்பானது.

நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடுங்கள், தேர்வுக்கு பின்னால் நீங்கள் தவம் கிடைக்க வேண்டாம், தேர்வாளர்கள் உங்களை தவம் கிடந்தது தேர்வுக்கு அழைப்பார்கள் என்று டிராவிட் எனக்கு கூறினார்.

இந்தியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் டீப் தாஸ்குப்தாவிடம் ரஹானே ESPN கிரிகின்ஃபோவுக்கு அளித்த பேட்டியில் ரஹானே இதனை தெரிவித்துள்ளார்.