அஞ்சலோ மெத்யூஸ் திடீரென தாயகம் திரும்பினார்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான அஞ்சலோ மேத்யூஸ் மேற்கிந்திய தீவுகளில் இருந்து உடனடியாக தாயகம் திரும்பினார் .

நேற்றைய நாளில் அஞ்சலோ மெத்தியூஸ் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை இடைநடுவே நிறுத்திக்கொண்டு தாயகம் திரும்புவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்தது.

குடும்ப நிலைமை காரணமாக தாயகம் திரும்புவதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்தாலும் அவரது குழந்தை சுகவீனம் அடைந்து இருக்கின்ற காரணத்தால் மேத்யூஸ் தாயகம் திரும்புவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன .

அஞ்சலோ மெத்தியூஸின் குழந்தையின் உடல் நலம் பெற வேண்டும் என்கின்ற என்ற பிரார்தனைகள் ஒட்டுமொத்தமான கிரிக்கெட் ரசிகர்களாலும் முன்வைக்கப்படுகின்றன .

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.