அடுத்தடுத்து இரண்டு வெளிநாட்டு தொடர்களில் இருபது-20 கிண்ணங்களை தனதாக்கிய தென்னாபிரிக்கா..!

அடுத்தடுத்து இரண்டு வெளிநாட்டு தொடர்களில் இருபது-20 கிண்ணங்களை தனதாக்கிய தென்னாபிரிக்கா..!

அடுத்தடுத்து இரண்டு வெளிநாட்டு தொடர்களில் இருபது-20 கிண்ணங்களை தனதாக்கிய தென்னாபிரிக்கா அண்மைக்காலமாக டுவென்டி டுவென்டி போட்டிகளில் அபார திறமையை வெளிப்படுத்தி வருகின்றது.

குறிப்பாக உலக T20 கிண்ணத்தை வெல்ல வெல்ல அணிகளில் ஒன்றாக கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகளை அதன் சொந்த மண்ணில் வைத்து 3-2 என அபாரமாக வெற்றி கொண்டது.

இதனைத் தொடர்ந்து அயர்லாந்து அணியை 3-0 என தென் ஆபிரிக்க அணி வெற்றி கொண்டிருக்கிறது.

அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு வெளிநாட்டு தொடர்களில் T20 கிண்ணங்களை கைப்பற்றி இருப்பதன் மூலமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் இடம்பெற இருக்கும் டி20 உலகக்கிண்ணத்தில் வெற்றியை குறிவைத்து தென்னாபிரிக்கா பயணிக்கிறது என பேசப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி, அயர்லாந்து அணியை இலகுவாக வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஷம்சி, டேவிட் மில்லர் ஆகிய நட்சத்திரங்கள் அண்மைக்காலமாக தென்னாபிரிக்காவின் வெற்றிகளில் பெரும் பங்காளர்களாக இருக்கின்றவையும் நினைவுபடுத்த தக்கது..