அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி..!

அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி..!

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறியவருகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 டுவென்டி 20 போட்டிகளில் அட்டவணைப்படுத்தப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

2 டெஸ்ட் போட்டிகளும் ஐசிசி சம்பியன்ஸ் டிராபி இன் புள்ளி பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படும் படியாக அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு போட்டி மும்பையில் இடம்பெறும் எனவும், மற்றைய போட்டி எங்கு, எப்போது இடம்பெறும் எனும் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை .

அடுத்த ஆண்டு உலகக் கிண்ண T20 போட்டித் தொடர் இடம்பெறவிருப்பதால் மூன்று T20 போட்டிகளும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.