அடுத்த போட்டியிலும் அஸ்வின் இல்லை- கோலி தெரிவித்த கருத்து .!
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கான சுற்றுலாவை மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
4 போட்டிகள் நிறைைவுக்குவந்த நிலையில், இந்தியா 2-1 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்த நான்கு போட்டிகளிலும் விளையாடும் சந்தர்ப்பத்தை இந்திய நிர்வாகம் வழங்க வில்லை, இந்த நிலையில் 5வது போட்டியில் அஸ்வினுக்கு சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இந்த நிலையில் கோலி ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் தெரிவித்த ஒரு விடயம் உற்று நோக்கப்படுகிறது.
கோலியை பொறுத்தவரையில் அவர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் ஐந்தாவது இறுதியுமான டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று நம்பப்படுகிறது.
ஏனென்றால் கோலி தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருக்கிறார், நாங்கள் புள்ளி விபரங்களையும் கடந்தகால சாதனைகளையும் கணக்கில் எடுப்பதில்லை, எங்களுக்கு எது தேவை என்்பதை நோக்கி நகர வேண்டுமோ அதில் அக்கறை படுகிறோம், குழுவாக சில தீர்மானங்களை நாங்கள் மேற்கொள்கிறோம்.
வெளியில் யார் என்ன சொல்கிறார்கள், என்ன சப்தங்கள் எங்களுக்கு வருகின்றன, வெளிக் கருத்துக்கள் பற்றி நாங்கள் கவலைப்படுவதுமில்லை கணக்கில் எடுப்பதில்லை.
ஒரு அணியாக முன்னோக்கிப் பயணிப்பதே எங்கள் நோக்கம் என கோலி ஆணித்தரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஆக மொத்தத்தில் அஸ்வினை அணியில் சேர்க்க வேண்டும் எனும் கருத்துக்களை ரசிகர்கள் முன்வைத்தாலும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரியவருகிறது.
பவதெவாகவே வெற்றிக்கு பின்னர் எக்காரணம் கொண்டும் வின்னிங் கொம்பினேசனை மாற்ற கோலி அக்கறைப்படுவதில்லை என்பதும் முக்கியமானது.