அண்டர்சன் உட்பட்ட இங்கிலாந்து வீரர்களை அலறவிட்ட இந்திய துடுப்பாட்ட வீரர்கள்..!

அண்டர்சன் உட்பட்ட இங்கிலாந்து வீரர்களை அலறவிட்ட இந்திய துடுப்பாட்ட வீரர்கள்..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம் பெற்று வருகிறது.

லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 78 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நேற்றைய நாளில் 423 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுக்கள் எனும் நிலையில் 3 ம் நாளை தொடர்ந்்தது, இறுதியில் 432 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

 

இதனடிப்படையில் இங்கிலாந்து இந்தியாவைவிட 354 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது, இந்த நிலையில் இந்திய அணி இன்றைய மூன்றாவது நாளில் இன்னிங்ஸ் தோல்வியை பெறுவது உறுதி என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, இந்திய அணியினர் மிகச்சிறப்பாக இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தைை முடித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இங்கிலாந்தின் அத்தனை பந்துவீச்சாளர்களையும் இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் என்று அலற விட்டனர்.

ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ஆட டத்தை ஆரம்பிக்க , முதல் விக்கட்டில் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

8 ஓட்டங்களுடன் ராகுல் ஆட்டமிழந்தார், ரோகித் சர்மா மற்றும் புஜாரா ஆகியோர் மிகச் சிறந்த இணைப்பாட்டத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ரோஹித் சர்மா 59 ஓட்டங்களை பெற்றிருந்த போது, நடுவரின் தவறான தீர்ப்பு காரணமாக ஆட்டமிழப்பு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் 99 ஓட்டங்களை இணைப்பாட்டம் புரிந்தமை  குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு வருகின்ற போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை பெற்றிருந்தது, புஜாரா 91 ஓட்டங்களுடன், கோலி 45 ஓட்டங்களுடனும்  களத்தில் உள்ளனர். இன்னும் இங்கிலாந்தை விட 139 ஓட்டங்கள் பின் நிலையில் இருக்கும் இந்திய அணி, முதல் 2 நாட்களும் பின்னிலையிலிருந்த ஆட்டத்தை மூன்றாவது நாளில் முழுவதுமாக கட்டுப்படுத்தி இந்த போட்டியில் இங்கிலாந்துக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

நாளைய நாள் முழுவதும் துடுப்பெடுத்தாடி குறைந்தது 150 க்கும் அதிகமான இலக்கை இந்திய நிர்ணயிக்குமாக இருந்தால் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களையும் தோற்றுவிக்கலாம் எனவும் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

எல்லாவற்றையும் நாளை முதல் செசன் தீர்மானிக்கும்.