அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை இலக்காகக் கொண்டு LPL 2022 ஜூலை மாதம் நடத்துவதற்கு தீர்மானம்!

அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை இலக்காகக் கொண்டு LPL 2022 ஜூலை மாதம் நடத்துவதற்கு தீர்மானம்!

அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை இலக்காகக் கொண்டு ‘இலங்கை கிரிக்கெட் திருவிழா’ என அழைக்கப்படும் LPL 2022 போட்டிகளை ஜூலை மாதம் நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது பதிப்பு இவ்வருடம் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு போட்டி டிசம்பரில் நடந்தது. எவ்வாறாயினும், இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு தீர்வாக பெருமளவிலான வெளிநாட்டு நாணயங்கள் நாட்டிற்குள் கொண்டுவர, லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளதாக உள்ளக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சில நாட்களுக்கு முன்னர் போட்டிப் பணிப்பாளர் பதவி விலகியதை அடுத்து புதிய போட்டிப் பணிப்பாளராக சமந்த தொடன்வெல நியமிக்கப்பட்டார்.

முன்னதாக, போட்டிகள் ஆகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பமாகவிருந்த போதிலும், போட்டியின் ஆரம்ப நாள் இன்னும் சில தினங்களில் வரக்கூடும் என புதிய போட்டிப் பணிப்பாளர் சமந்த தொடன்வெல தெரிவித்துள்ளார்.

உள்ளக கிரிக்கெட் வட்டாரங்களின்படி, IPG மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் எதிர்காலத்தில் கூடுதல் விவரங்களை வெளியிடுவார்கள் எனவும் சண்டே டைம்ஸ் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.