இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும் இளம் வீர்ருமான பான்ட் தொடர்பில் முன்னாள் இளமைக்கால பயிற்சியாளர் தாரா சின்கா ஒரு கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
ஒருநாள் அதிகாலை 3:30 க்கு வந்து என் வீட்டு கதவைத்தட்டி பான்ட் மன்னிப்பு கேட்டார் என்று அவர் தகவல் பகிர்ந்திருக்கிறார்.
டெல்லியில் கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்ட நிலையில் வலைப்பயிற்சியின் போது செய்த தவறுக்காக அவரை அதிகமாக திட்டி விட்டேன் ,அதனால் மனமுடைந்து இரவிரவாக தூக்கமின்றித் தவித்த பான்ட், அதிகாலை வேளையில் 3.30 க்கு வந்து அவர் மன்னிப்பு கோரியதாக அவருடைய இளம் காலத்து பயிற்சியாளர் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
இதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த ஒரு ஆளுமை மிக்க வீரர் எனத் அதை ரிவித்திருக்கும் முன்னாள் பயிற்சியாளர், எதிர்காலத்தில் தோனி, கோலி போன்று மிகச்சிறந்த வீரராகவும், மிகச் சிறந்த தலைவராகவும் வருவதற்குரிய வாய்ப்பு காணப்படுகிறது எனத்தெரிவித்தார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அவருடைய தலைமைத்துவப் பண்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார், தவறு செய்தால் மன்னிப்பு கேட்பதற்கு தயங்காதவராகவும் ஒரு பிளையை திரும்பவும் செய்யாதவராகவும் உடனே திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் இருக்கிறது, அதுதான் அவரது வெற்றியின் ரகசியம் என்று அவரது பயிற்சியாளர் கருத்து வெளியிட்டிருக்கிறார்.