அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்ட தலைவர்கள் வரிசையில் முன்னேறி வரும் விராட் கோலி..!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் அகராதியில் அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட தலைவர்கள் வரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கிளைவ் லொயிட்டின் சாதனையை முறியடித்து நான்காவது இடத்துக்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.
இதுவரை 63 டெஸ்ட் போட்டிகளில் 37 வெற்றிகளையும்,15 தோல்விகளையும் விராட் கோலி பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர்கள் வரிசையில் தென்னாப்பிரிக்காவின் கிரஹம் ஸ்மித் (53) முதல் இடத்திலும், பொன்டிங் (48) இரண்டாவது இடத்தையும் 3-ஆம் இடத்தில் ஸ்டீவ் வோ (41) ஆகியோர் காணப்பட 4வது இடத்துக்கு விராட் கோலி முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.