அதிக ரன் அடித்த ரிஸ்வானை விமர்சித்த அக்தார் , இலங்கையை பாராட்டினார்…!

 

பாக்கிஸ்தான் மோசமான தோல்வியை சந்தித்த பிறகு, முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ட்விட்டரில் அணியின் நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசினார்,

மேலும் தொடக்க ஜோடியான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானது ஆரம்ப ஜோடி வேலை செய்யவில்லை என்று விமர்சித்தார். ஃபகார் ஜமான், குஷ்தில் ஷா மற்றும் இத்பிகார் அகமது ஆகிய மிடில்-ஆர்டர் மூவரையும் அவர் விமர்சித்தார்.

” பாகிஸ்தான் நிறைய விஷயங்களைப் பார்க்க வேண்டும். ஃபக்கர், இப்திகார், குஷ்தில் அனைவரையும் கவனிக்க வேண்டும். மேலும் ரிஸ்வான், 50க்கு 50 இனி வேலை செய்யப் போவதில்லை. பாகிஸ்தானுக்கு பலன் இல்லை.

ஹேட்ஸ் ஆஃப் இலங்கைக்கு. என்ன ஒரு அணி” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

 

ரிஸ்வான் அதிக ரன் எடுத்தவராக போட்டியை முடித்தார். அவர் ஆறு போட்டிகளிலும் விளையாடி, மூன்று அரைசதங்களின் உதவியுடன் 56.20 சராசரியில் மொத்தம் 281 ரன்கள் எடுத்தார். ஆனால் போட்டி முழுவதும், அவரது ஸ்ட்ரைக் ரேட் விமர்சிக்கப்பட்டது, இது 117.57 ஆக இருந்தது.

T20 போட்டிகளில் 50 பந்துகளுக்கு 50 ரன்கள் என்பது வேலைக்கு உதவாதது எனவும் அக்தர் விமர்சித்தார்.

எமது YouTube தளத்துக்கு செல்ல ?