அதிரடி சதமடித்த ஹென்ரிச் கிளாசன்- தொடரை தக்கவைத்த தென் ஆபிரிக்கா..!

ஹென்ரிச் கிளாசனின் இரண்டாவது ஒருநாள் சதத்தால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா தவறவிடாமல் பார்த்துக்கொண்டது.

தென்னாப்பிரிக்கா போட்செஃப்ஸ்ட்ரூமில் 261 ரன்களை துரத்துவதில் அதிரடிகாட்டிய கிளாசென் டேவிட் மில்லருடன் அரை சதத்தையும், மார்கோ ஜான்சனுடன் 103 ரன் பார்ட்னர்ஷிப்பையும் பகிர்ந்து நான்காவது அதிவேக சதத்தைப் பதிவு செய்ததன் மூலமாக தனது அணிக்கு அசத்தலான வெற்றியை பரிசளித்தார்.

டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.2 ஓவர்களில் 260 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன் 39 ரன்களும், ஹோல்டர் 36 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக ஆடி 61 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இரிந்தார். ஜேன்சன் 43 ரன்னில் அவுட்டானார். 6வது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன், ஜேன்சன் ஜோடி103 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 29.3 ஓவரில் 264 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 


எமது YouTube தளத்திற்கு 👇