அதிரடி தடையை அறிவித்தது ஸ்ரீ லங்கா கிரிக்கெட்..!

அதிரடி தடையை அறிவித்தது ஸ்ரீ லங்கா கிரிக்கெட்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் 3 வீரர்களின் ஒழுக்காற்று விசாரணைகளை தொடர்ந்து அவர்களுக்கு போட்டி தடை விதிப்பதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியில் இடம்பெற்ற குசல் மெண்டிஸ், டிக்வெல்ல, தனுஷ்க குணத்திலக ஆகியோர் கொரோனா வலயத்தை விட்டு வெளியேறிய நிகழ்வு இடம்பற்றது.

குசல் மெண்டிஸ் சிகரெட் புகைப்பது போன்ற காணொளிகளும் வெளியானதை தொடர்ந்து, இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் அவர்களுக்கான தடையை அறிவித்துள்ளது.

குசல் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக ஆகியோருக்கு 2 ஆண்டுகள் போட்டி தடையும் டிக்வெல்லவுக்கு 18 மாதங்கள் போட்டி தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் தண்டமும் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.