அதிரடி நாயகர்களை அணிதிரட்டி உலகக் கிண்ணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அறிவிப்பு ..!
டுவென்டி டுவென்டி உலகக்கிண்ண போட்டிகளுக்கான அணிகளை அறிவிக்கும் இறுதி திகதி நாளையுடன் (10) நிறைவடைகிறது.
10ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அணிகளும் இறுதிப்படுத்தி அணிகளை அறிவிக்க வேண்டுமென ஐசிசி அறிவித்துள்ளது.
நியூசிலாந்து முதல் அணியாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, ஓமான், பங்களாதேஸ், இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் இதுவரைக்கும் ஐசிசி உலகக் கிண்ண அணிகளை அறிவித்திருக்கின்றன.
சற்றுமுன்னர் பொல்லார்ட் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் குழாம் பெயரிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் 6 ஆண்டுகளுக்குப் பின்னர், உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பாக ஜொலித்த வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்போல் அணிக்கு அழைக்கப்பட்டார்,
இதுவரைக்கும் டுவென்டி20 போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் சார்பில் அறிமுகமாகாத ரோஸ்டன் சேஸ் முதல் தடவையாக உலகக்கிண்ணத்தின் அணியில் இடம் பிடித்திருக்ககின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஆயினும்கூட சுனில் நரைன் உலகக்கிண்ணத்துக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் உள்ளடக்கப்படவில்லை என்பது முக்கியமானது.
நடப்புச் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் ஒரு வலுவான அணியை உலகக்கிண்ணத்தை இலக்கு வைத்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் .
அணி: கீரான் பொல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மியர், எவின் லூயிஸ், ஓபெட் மெக்காய், லென்ட்ல் சிம்மன்ஸ், ரவி ராம்பால், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஓஷேன் வால்ஸ் ஹெச் ஜூனியர்
ரிசர்வ்ஸ்: டேரன் பிராவோ, ஷெல்டன் கோட்ரெல், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன்