அதிரடி மாற்றங்களுடன் 5வது டெஸ்ட்டை எதிர்கொள்ள தயாராகும் இங்கிலாந்து- புதிதாய் இரண்டு வீரர்கள் அணியில்..!

அதிரடி மாற்றங்களுடன் 5வது டெஸ்ட்டை எதிர்கொள்ள தயாராகும் இங்கிலாந்து- புதிதாய் இரண்டு வீரர்கள் அணியில்..!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

4 போட்டிகள் நிறைவுற்ற நிலையில் இந்திய அணி தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது, சொந்த மண்ணில் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்காக இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி அதிரடி மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான அணியில் மேலதிகமாக இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர் .

நான்காவது போட்டியில் இருந்து விடுப்பு வழங்கப்பட்டிருந்த விக்கெட் காப்பாளர் பட்லர், தன்னுடைய குழந்தை பாக்கியத்தை தொடர்ந்து மீண்டும் அணியில் இணைந்து கொண்டிருக்கின்றார். இது மாத்திரமல்லாமல் சுழற்பந்து வீச்சாளர் ஜக் லீச் அணிக்குள்ளே கொண்டுவரப்பட்டார்.

சுழற்பந்து வீச்சாளர் லீச் அணியில் கொண்டுவரப்பட்டதன் காரணமாக சில வேளைகளில் மொயின் அலி அணியில் நீக்கப்பட்டு லீச் விளையாடலாம் ,அல்லது இரு சுழற்பந்து வீச்சாளர்களோடு போட்டியை எதிர்கொள்ளலாம் எனவும் நம்பப்படுகிறது.

அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய இங்கிலாந்து டெஸ்ட் அணி.

ஜோ ரூட் (c), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜொனாதன் பெயர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர் (wk), சாம் கர்ரான், ஹசீப் ஹமீட், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ் , மார்க் வூட்.