அதிருப்திக்குள்ளான சேவாக் ,ஓட்டம் குவிக்க தவறிய வீரர் மீது காட்டமான கண்டனம் …!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் போது இந்தியாவின் முக்கியமான துடுப்பாட்ட வீரரான மனிஷ் பாண்டே ஓட்டங்களை (26,37,11) பெறுவதற்கு தடுமாறினார் .
மூன்று போட்டிகளிலும் ஓட்டங்களை மிகச்சிறப்பாக பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் அமைந்தும் அவர் வாய்ப்புகளை நழுவ விட்டமையை சேவாக் விமர்சித்துள்ளார் .
இதன் காரணத்தால் இவருக்கு இனி வரப்போகும் நாட்களில் இந்திய தேர்வாளர்கள் வாய்ப்புகளை கொடுப்பதற்கு தயங்குவார்கள் எனும் கருத்து சேவாக்கிடம் இருந்து வந்துள்ளது.
குறிப்பாக சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷான் போன்ற வீரர்கள் போட்டி நிலையில் இருக்கின்ற காரணத்தால், மனிஷ் பாண்டே இனிவரும் தொடர்களில் இந்தியர்களால் கவனத்தில் கொள்ளப்படமாட்டார் எனவும் தெரிவித்தார்.
இது மாத்திரமல்லாமல் ஹார்திக் பாண்டியாவும் துடுப்பாட்டத்தில் சவதப்பியமை தனக்கு ஏமாற்றமளிப்பதாகவும் சேவாக் தெரிவித்தார்.
இந்த 3 போட்டி ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்ட்யாவும் சோபிக்கத் தவறிவிட்டார். 2 இன்னிங்ஸில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
3 போட்டி ஒருநாள் தொடரில் அவரது பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் 1/34 (5), 0/20 (4) & 1/43 (5). அவர் 6.92 என்ற ஓட்ட அடிப்படையில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.