அதிர்ச்சித் தோல்வியில் நடால்

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் முன்னணி வீரர் ரபேல் நடால் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி  இடம்பெற்றது.
நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் 4-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்)- டெய்லர் பிரிட்ஸ் உடன் (அமெரிக்கா) மோதினார்.
இந்த நிலையில், எதிர்பார்க்காத வகையில் நடால் அதிர்ச்சிகரமாக தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தார்.
20-வது வரிசையில் உள்ள பிரிட்ஸ் 6-3, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தி பட்டம் வென்றார்.
இந்த ஆண்டில் நடால் சந்தத்த முதல் தோல்வி இதுவாகும்.