அதிஷ்டம் அடிக்குமா தினேஷ் கார்த்திக்கிற்கு ?

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளராக செயல்பட்ட தினேஷ் கார்த்திக், 2019 உலக கிண்ண தோல்விக்கு பின்னர் தேசிய அணியில் வாய்ப்பை இழந்து அவதிப்படுகின்றார்.

ஆயினும் இந்தாண்டு ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் இருபதுக்கு இருப்பது உலக கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், ஒவ்வொருவரும் அணியில் இடம்பிடிக்க கடுமையான பிரயத்தனம் செய்து வருகின்றனர்.

இதில் 35 வயதான டினேஷ் கார்த்திக்கும் ஒருவர்.

இந்தியாவில் இடம்பெறும் சாயிட் முஷ்டாக் அலி T20 தொடரில் தமிழ்நாடு அணியின் தலைவராக செயல்படும் கார்த்திக், அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ளதுடன் துடுப்பாட்டத்திலும் அசத்தியுள்ளார்.

7 போட்டிகளில் பங்கேற்றுள்ள கார்த்திக் 5 இல் துடுப்பாடும் வாய்ப்பு பெற்றார்.

46(17)
40*(30)
47*(31)
2(5)
26*(17)

மொத்தமாக 100 பந்துகளை சந்தித்து 161 ஓட்டங்களை 80.5 எனும் சராசரியில் பெற்றுள்ளார்.இதன்முலம் கார்த்திக் மீண்டும் தேசிய அணியில் வாய்ப்பு பெறுவாரா எனும் கேள்வி உருவாகியுள்ளது.

இந்தியாவில் இளம் வீரர்கள் கடுமையான போட்டியில் இருக்கும் நிலையில் 35 வயதில் கார்த்திக் மீள்பிரவேசம் செய்தால் ஆச்சரியமானதுதான்.