அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்த நாள்…! (வீடியோ)

இந்தியாவின் அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்த நாள் இன்றாகும்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உலக சாதனை ஒன்றை 1999ஆம் ஆண்டு நிலைநாட்டினார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜிம் லேஹர் முன்னர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை படைத்திருந்தார்.

அந்த உலக சாதனையை அனில் கும்ப்ளே 1999இல் பாகிஸ்தானுக்கு எதிராக இதே நாளில் நிலைநாட்டினார்.

டெல்லியில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியிலேயே அணில் கும்ப்ளே இச் சாதனையை படைத்தார்.
இப்போட்டியில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் இல் 4 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 74 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களையும் வீழ்த்தி மொத்தமாக 14 விக்கெட்களை ஒரே போட்டியில் வீழ்த்தி இருந்தார் அணில் கும்ப்ளே.

இது நாள் வரை 2 தடவைகள் மாத்திரமே இச் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.
1956 இங்கிலாந்து அணியின் Jim Laker
மற்றையது
1999 இந்திய அணியின் அணில் கும்ப்ளே

நினைவை மீட்க வீடியோ இணைப்பு.