அனுபவமே சிறந்த பெறுபேற்றை தரும்- ஹசரங்க மீள்வான்…!
ஒரு எப்பேர்பட்ட மாவீரனும், தான் சந்திக்கும் முதல் யுத்தத்திலோ முதல் வெளியூர் யுத்தத்திலோ அவன் அதற்கு முதல் எத்தனை வெற்றி பெற்று இருந்தாலும் அந்த வீரன் பயிற்சியில் எப்பேர் பட்டவானக இருந்தாலும் முதல் யுத்தம், முதல் வெளியூர் யுத்தம் செய்யும் போது ஆரம்பம் சில இடர்பாடுகளை தரும்.
அதில் மனம் நோகாது விடா முயற்சியுடன் எதிர்த்து நின்றால் அது விஸ்வரூப வெற்றியை தரும்.
அதே நிலையில் தான் தற்போது இலங்கை சுழல் வீரன் ஹசரங்கவும். 24 வயதில் குறைந்தளவு சர்வதேச போட்டிகள் விளையாடிய ஒருவன் 4 டெஸ்ட் போட்டிகள், 29 ODI, 25 T20 மட்டுமே சர்வதேச அரங்கில் பங்குபற்றிய ஒருவன் சமீப காலமாக இலங்கை அணி வெற்றிக்கு வழிவகுத்த ஒருவர்தான் ஹசரங்க.
இம்முறை IPL இல் ஆரம்பமே வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த இலங்கையின் ஒரே ஒரு வீரர் ஹசரங்க ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போக நீங்க எடுங்க எடுக்காம போங்க நான் இலங்கைக்கு என்னோட best தொடந்து கொடுப்பேன் என்று இலங்கை அணி வெற்றிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று கொடுத்தான்
எதிர்பாராத வாய்ப்பு, திறமை இருப்பவனை மட்டுமே தேடிவரும் என்பார்கள். அதே போல வாய்ப்பு தேடிவந்தது. ஆம் IPL 2nd edition ஆரம்பமானது அடம் ஸம்பா வெளியே போக அந்த இடத்தை நிரப்ப RCB இன் தேர்வு இலங்கை பக்கம் வந்தது ஹசரங்க RCB அணியில் இணைய இலங்கை ரசிகர்கள் சந்தோச ஆரவாரமடைய. முதல் போட்டியும் வந்ததும் ஹசாரங்க IPL இல் கொல்கத்தா அணிக்கு எதிராக முதல் போட்டியில் இறங்க RCB அதிக ஓட்டம் பெறாது போக முதல் போட்டி அதுவும் பெரிய ஒரு தொடரில் அதைவிட பெரும்பாலும் வேக பந்து வீச்சுக்கு பேர் போன மைதானத்தில் முதல் போட்டி, என்ற பிரஸர் யாருக்கும் வரலாம் பெரிய இலக்கு இல்லை இரு ஓவர்கள் பந்து வீச அதில் குறிப்பிட தக்க Performance இல்லை,
இரண்டாவது போட்டியில் சென்னை அணியை எதிர் கொள்ள அதிலும் நம்பிக்கையுடன் இறங்க முதல் போட்டியில் அதுவும் இதில் ஆடும் வீரர்கள் வருடத்துக்கு ஒருமுறை தான் விளையாடுபவர்கள் ஓய்வு பெற்றவர்கள் அவர்கள் batting strategy யாராலும் புரிந்து கொள்ள முடியாத நிலை, அந்த வீரர்கள் எதிர் அணி பந்து வீச்சாளர் நுணுக்கங்களை இலகுவில் கண்டறியக்கூடிய நிலையில் இருப்்பவர்கள். அதனாலும் ஒரு சில களத்தடுப்பு தடுமாற்றதால் ஓட்டங்கள் அதிகம் போய் இருந்தது.
ஆனாலும் இந்த இரு போட்டி அனுபவம் போதும் தொடர்ந்து வரும் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டால் பயத்தை தனது அனுபவத்தால் தன்னையும் அணியையும் வெற்றிக்கு அழைத்து செல்வதற்கு….
என்ன இருந்தாலும் UAE மைதானங்களில் பங்குகொள்ளும் முதல் தொடர் இந்த அனுபவம் இலங்கை அணிக்கு விரைவில் நல்ல ஒரு பெறுபேற்றை வழங்கும், அதுதான் இடம்பெறவுள்ள t20 உலக கிண்ண போட்டியில் IPL விளையாடிய அனுபவத்தில் அந்த மைதான ஆடுகள நிலை, மைதான காலநிலை எல்லாவற்றுக்கும் தன்னை பழக்கப்படுத்தி கொண்டு t20 உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கு தன்னை அந்த மைதான நிலைக்கு மாற்றி இலங்கை வெற்றியை உறுதிபடுத்த தன்னை மாற்றி பந்துவீச்சில் அதிகம் கவனம் செலுத்தி உலக கிண்ண போட்டியில் இலங்கையை சிறப்பான நிலைக்கு கொண்டு செல்ல பெரிய பங்கு ஹசரங்க என்னும் ஒருவனே வழங்குவான்..
அனுபவமே ஆசான்- ஹசரங்க மீள்வான்..!
#சந்துரு வரதராசன்