அனைத்து பல்கலைக்கழக கரப்பந்தாட்ட தொடர் யாழ் சாம்பியன்

அனைத்து பல்கலைக்கழக கரப்பந்தாட்ட தொடர் யாழ் சாம்பியன்

மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ் மாவட்ட மாணவர் ஒன்றியம் நடத்திய கரப்பந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டி இன்றைய தினம் நடைபெற்று முடிந்த நிலையில், மொறட்டுவைப் பல்கலைக்கழக – B அணியை எதிர்த்து யாழ்பாண பல்கலைக்கழக அணி பங்கு பற்றிய இறுதி போட்டியில் யாழ்பாண பல்கலைக்கழகம் அணி வெற்றி பெற்றது. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அரச பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் ப‌ங்கு பற்றிய இப் போட்டியில் ஏழு வெவ்வேறு பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பது அணிகள் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. கிருபா leraner அனுசரணையுடன் நடைபெற்ற இந்த சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் சிறப்பு பதிவுகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கான வெற்றி கோப்பை மற்றும் பதக்கங்களை கிருபா Learners நிறுவுனர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.