அன்டேர்சனுக்கு சவால் விடும் இந்திய வீராங்கனை…!

அன்டேர்சனுக்கு சவால் விடும் இந்திய வீராங்கனை…!

இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஒரு சாதனை படைத்துள்ளார்.

இன்றைய போட்டியில் 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய கோஸ்வாமி அறிமுகமானது 2002 ம் ஆண்டில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

39 வயதாகும் கோஸ்வாமி,இங்கிலாந்தின் ஆண்டர்சன் போன்று 39 வயதிலும் கிரிக்கெட் களத்தில் அசத்திக் கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2002 இல் கிரிக்கெட் அறிமுகம் மேற்கொண்டு இப்போதும் கிரிக்கெட்டில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோஸ்வாமி 10 டெஸ்ட் போட்டிகளிலும் 183 ஒருநாள் போட்டிகளிலும், 63 T20 போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.

தென் ஆபிரிக்க அணி இன்றைய போட்டியில் 157 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.bcci.tv/videos/151640/jhulan-goswami-s-brilliant-4-42