அபார வெற்றியுடன் தொடரை சமன் செய்தது தென்ஆப்பிரிக்க அணி..!

அபார வெற்றியுடன் தொடரை சமன் செய்தது தென்ஆப்பிரிக்க அணி..!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் தென் ஆபிரிக்க்அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி சற்றுமுன் நிறைவுக்கு வந்துள்ளது.

முதல் போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி, இன்று 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கொழும்பில், பிரேமதாச மைதானத்தை அண்டிய பகுதியில் பெய்த கடுமையான மழையின் காரணமாக போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 47 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

ஜனமன் மாலன் 121 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார், சாமிக்க கருணாரத்ன, சமீர ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு 284 எனும் இலக்குடன் ஆடிய இலங்கை அணி 36.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் 197 ஓட்டங்கள் பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் சம்ஸி 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது, இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சரித் அசலங்க தனது தொடர்ச்சியான மூன்றாவது அரை சதத்தை விளாசி 77 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வோர்த் லூயிஸ் முறைமூலமாக தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.