அபுதாபி T10 லீக்கில் பங்கேற்க 8 இலங்கை வீரர்களுக்கு சந்தர்ப்பம்- விபரம் இணைப்பு.

அபுதாபி T10 லீக்கில் பங்கேற்க 8 இலங்கை வீரர்களுக்கு சந்தர்ப்பம்- விபரம் இணைப்பு.

அபுதாபி T10 லீக்கின் வீரர்கள் சேர்ப்பில் 8 இலங்கை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டின் வேகமான மற்றும் மிகவும் பொழுதுபோக்கு வடிவமாக கருதப்படும் அபுதாபி டி10 லீக் இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மற்றொரு சீசனில் உலகை கவர்ந்திழுக்கும் அபுதாபி டி 10 லீக் தயாராக உள்ளது.

உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஃபேஃப் டு ப்ளெசிஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ,ஓயின் மோர்கன், ஜேசன் ரோய், கிறிஸ் கெயில் உட்பட ஏராளமான வீரர்கள் இந்த தொடரில் விளையாடவுள்ளனர்.நவம்பர் 19 முதல் டிசம்பர் 4 -2021 வரை இந்த தொடர் நடைபெறும்.

புதிய பதிப்பிற்கான வரைவு நேற்று (07 ) நடைபெற்றது, 26 கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த 1186 வீரர்களது பெயர் விபரங்கள் தேர்வுக்கு கிடைத்தது.

இதிலே இலங்கை சார்பில் மகேஷ் தீக்ஷனா, மதீஷ பத்திரன, உபுல் தரங்க, இசுரு உதான, சாமிக கருணாரத்ன, வனிந்து ஹசரங்க, தனஞ்சய லக்ஷன் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்த தொடருக்கான அணிகளில் இடம் பெற்ற இலங்கை வீரர்கள்.

மராத்தா அரேபியன்ஸ் : துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, தனஞ்சய லக்ஷன், சாமிக கருணாரத்ன

பங்களா டைக்கேர்ஸ்: இசுரு உதான, மதீஷ பத்திரன

நொர்தேர்ன் வொரியேர்ஸ் : உபுல் தரங்க

டெக்கான் கிளாடியேட்டர்ஸ்: வனிந்து ஹசரங்க