அபுதாபியில் இன்று நிறைவுக்கு வந்த 10 ஓவர்கள் கொண்டதான அபுதாபி T10 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை வீரர்கள் இருவர் அபார திறமையை வெளிப்படுத்தினர்.
இலங்கையின் LPL போட்டிகளில் காலி அணிக்காக விளையாடிய தனஞ்செய லக்ஷான் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோன்று ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடிய மகேஷ் தீக்ஷன எனும் இளம் வீரர் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இலங்கை வீரர்கள் இருவரும் இன்றைய போட்டியில் மிகச்சிறப்பாக அசத்தியமை குறிப்பிடத்தக்கது.
போட்டியில் இலங்கையின் இளம் வீரர்கள் இருவரும் விளையாடிய நிக்கலஸ் பூரான் தலைமையிலான நோர்த்தேர்ன் வோரியேரஸ் அணி 8 விக்கட்களால் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது 3 விக்கட்களை கைப்பற்றிய மகேஷ் தீக்ஷனவிக்கு கிடைத்தது.