அப்பாவுக்காக விசில் போட்ட குழந்தை- சென்னை போட்டியில் அழகிய சம்பவம்..! (காணொளி இணைப்பு)

அப்பாவுக்காக விசில் போட்ட குழந்தை- சென்னை போட்டியில் அழகிய சம்பவம்..! (காணொளி இணைப்பு)

14 வது IPL போட்டி தொடரின் நேற்று இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின,

முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு ஆடிய டெல்லி அணி 2 பந்துகள் மீதமிருக்க போட்டியில் 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி பெற்றது, இந்த போட்டியின் போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று பதிவானது.

பவுண்டரி லைனுக்கு அருகில் களத்தடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சென்னை அணியின் பாfப் டு பிளஸிஸுக்கு அவரது மகள் விசில் போட்டு உற்சாகமூட்டியதுடன் டாடி டாடி என்று கையசைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்று தோனி மகள் கடவுளை வணங்கிய வண்ணம் பிரார்த்தனைகள் செய்த புகைப்படம் வரலாகியுள்ள நிலையில் இந்த காணொளியும் பலராலும் பகிரப்படுகின்றது.

காணொளி இணைப்பு.