அப்பாவைப் போலவே பந்துவீச்சும் முரளியின் மகன்-வைரல் வீடியோ…!

அப்பாவைப் போலவே பந்துவீச்சும் முரளியின் மகன்-வைரல் வீடியோ…!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நமது தலைமுறையின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவராக சாதனைகள் பல படைத்தவர்.

இப்போது IPL சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக இருக்கும் முரளிதரன், தனது மகன் தன்னைப்போலவே பந்துவீசும் காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அச்சில் வார்த்தால்போல் முரளிதரனின் மகன் அவரது சாயலில் பந்துவீசுவது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

133 டெஸ்ட் போட்டிகளில் 22.7 சராசரியாக 800 விக்கெட்டுகள் கைப்பற்றிய அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல, ஒருநாள் போட்டிகளிலும் மாஸ்டர் ஸ்பின்னராக தன்னை நிரூபித்துள்ளார். 350 ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இளம் மற்றும் வரவிருக்கும் ஆஃப்-ஸ்பின்னர்கள் அவரது செயலைப் பின்பற்றுவது கடினம் என்று தோன்றினாலும், அது இயல்பாகவே அவரது மகன் நரேனுக்கு வருகிறது. ஜூனியர் முரளி தனது அப்பாவுக்கு நிகராகவே பந்துவீசுகின்றார் . சமீபத்தில் தந்தை மற்றும் மகன் பந்துவீசும் வீடியோவை டுவிட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமோ.