அமெரிக்கன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இங்கிலாந்தின் 18 வயது இளம் வீராங்கனை- வரலாற்று சாதனை..!
கிரான்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் டென்னிஸ் ரசிகர்களின் பெருவிருப்புக்குரிய அமெரிக்கன் பகிரங்க டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நேற்று நடைபெற்றது.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி அதிகாலை வேளையில் இந்தப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கனடாவின் 19 வயதான லேலா பெர்னாண்டஸ் வீராங்கனையும், கனடாவில் பிறந்து இங்கிலாந்துக்கு விளையாடி வருகின்ற 18 வயதான எம்மா ரடுசானு ஆகிய வீராங்கனையும் முட்டி மோதினர்.
இருவரும் முட்டி மோதிய ஆட்டத்தில் 6-4, 6-3 எனும் கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுசானு வெற்றி பெற்று முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தனதாக்கி வரலாறு படைத்துள்ளார்.
எம்மா ரடுசானு தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கனடியன் லேலா பெர்னாண்டஸை 6-4, 6-3 என்ற கணக்கில் அமெரிக்க ஓபன் இறுதி போட்டியில் சனிக்கிழமை தோற்கடித்தார், 1999 க்கு பின்னர் இரு டீன் ஏஜ் வீராங்கனைகள் கிரான்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் நேற்று மோதினர்.
“இது நம்பமுடியாத கடினமான போட்டி, ஆனால் நிலை மிக சிறப்பாக இருந்தது என்று நான் நினைத்தேன்,” என்று ரடுகானு பின்னர் கூறினார்,
போட்டியின் போது பெர்னாண்டஸ் விளையாடிய விதத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். “மேலும் பல போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகளில் நாங்கள் ஒருவருக்கொருவர் விளையாடுவோம் என்று நம்புகிறேன்.” எனவும் ரடுசானு தெரிவித்தார்.