அமெரிக்க அணியில் இணையப்போகும் இரண்டாமவர் யார் ?
இலங்கை கிரிக்கெட்டின் முக்கிய மூன்று வீரர்கள் இங்கிலாந்தில் இடம்பெற்ற போட்டிகளின்போது ஒழுக்காற்று சிக்கலில் மாட்டிக்கொண்டதால் அவர்களுக்கு அண்மையல் ஓராண்டு கால தடை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணத்திலக ஆகியோர் Bio Bubble விதிமுறையை மீறி வெளியில் சென்றதற்காக அவர்களுக் ஓராண்டு போட்டி தடையை இலங்கை கிரிக்கெட் விதித்தது.
இதற்குப் பின்னரான தகவல்களின் அடிப்படையில், தனுஷ்க குணதிலக அமெரிக்காவிற்கு சென்று அமெரிக்க தேசிய அணியில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் மீதமான இருவரில் இன்னுமொருவரும் அமெரிக்க தேசிய அணியில் இணைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக ‘Sunday morning sports’ செய்தியை வெளியிட்டிருக்கிறது.
ஆண்டுக்கு 125,000 அமெரிக்க டாலர்கள் (ரூ. 24,931,150) ஊதியமாக பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன, ஆயினும் அந்த இரண்டாவது வீரர் குசல் மெண்டிஸா அல்லது நிரோஷன் டிக்வெல்லவா என்பது தொடர்பில் இதுவரையும் எதுவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.