அமெரிக்க அணியில் இணைய முயற்சிக்கும் தனுஷ்க குணதிலக..!
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக இலங்கை கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்து விட்டு அமெரிக்க கிரிக்கெட் அணியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் பிரபலமான ஆங்கில ஊடகமொன்று SLC யை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகிய மூன்று வீரர்களும் Bio Bubble எனப்படும் உயிர் குமுழி முறைமையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதனால் இங்கிலாந்து தொடரில் இருந்து இடைநடுவில் மூவரும் இலங்கைைக்கு அழைக்கப்பட்டனர்.
இவர்களது ஒழுக்காற்று விசாரணைகளின் அடிப்படையில் மூவருக்கும் ஓராண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டது, இது மாத்திரமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டு விளையாட முடியாது எனவும் ஒரு கோடி தண்டப்பணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தனுஷ்க குணதிலக கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அமெரிக்க தேசிய அணியில் இணையக்கூடும் என எதிர்பார்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஷெஹான் ஜெயசூரிய ,அமில அபோன்சோ ஆகிய வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அமெரிக்க அணியில் இணையும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது மாத்திரமல்லாமல் நியூசிலாந்து அணியின் கோரி அண்டேர்சன் அமெரிக்க தேசிய அணிக்கு தயாராகி வரும் நிலையில், தனுஷ்க குணதிலகவும் இணைைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன .
எது எவ்வாறாயினும் தடையை சந்தித்திருக்கும் இலங்கையின் தனுஷ்க குணத்திலக இது தொடர்பில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இனி வரப்போகின்ற நாட்களில் தனுஷ்க குணதிலகவின்் முடிவு எவ்வாறு அமையப் போகிறது என பொறுத்திருந்து அறிந்து கொள்ளலாம்.