அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையுடன் இணைந்து விளையாடும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஃப்ளெமிங் சென்னை அணியில் பல ஆண்டுகளாக பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார், மேலும் அவரது பயிற்சியின் கீழ் சென்னை அணி 4 ஐபிஎல் பட்டங்களை வென்றது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 போட்டியில் இணைந்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் உள்ளார்.
சூப்பர் கிங்ஸ் தவிர, ஐபிஎல் அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளும் மேஜர் லீக் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளன.
சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், MI நியூயார்க், சியாட்டில் ஓர்காஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகிய 6 அணிகள் விளையாடும் இந்தப் போட்டி, ஜூலை 13 முதல் 30 வரை டெக்சாஸின் கிராண்ட் ப்ரேரியில் நடைபெற உள்ளது.
அணிகளுக்கான அமெரிக்க வீரர்களை வாங்குவதற்கான வீரர் வரைவு (Draft) சமீபத்தில் நடைபெற்றது, இதில் ஒவ்வொரு அணியும் தங்களின் அணிகளுக்கு தலா 9 வீரர்களை தேர்வு செய்தது. உள்ளூர் வீரர்களுக்கு மேலதிகமாக, போட்டியில் இணையவுள்ள பல வெளிநாட்டு வீரர்கள் பற்றிய தகவல்களும் தெரியவந்துள்ளது, அதன்படி இலங்கையின் வனிது ஹசரங்க வாஷிங்டன் டிசி ஃப்ரீடம் அணியை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.
அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துள்ள இலங்கையின் முன்னாள் வீரர்களான ஷெஹான் ஜயசூரிய மற்றும் ஏஞ்சலோ பெரேரா ஆகியோர் சியாட்டில் ஓர்காஸ் அணியினால் தெரிவு செய்யப்பட்ட நிலையில், லஹிரு மிலன்டா டெக்சாஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
எமது YouTube தளத்திற்கு செல்லுங்கள் 👇