அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளை தவறவிடும் நடால்..!
ஸ்பெயின் நாட்டின் பிரபலமான டென்னிஸ் நட்சத்திரமும் 20 கிராண்ட்ஸ்லாம் மகுடங்களை வெற்றி கொண்டவருமான ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை தன் ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார் .
இந்த ஆண்டு இடம்பெறவிருந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க (US Open ) டென்னிஸ் தொடரில் தன்னால் விளையாட முடியாது எனத் தெரிவித்தார்.
காலில் ஏற்பட்டிருக்கும் உபாதை காரணமாக நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் நடால், US open போட்டிகளை தவறவிடுவதாகவும் இந்த ஆண்டுக்கான தன்னுடைய டென்னிஸ் பருவம் இத்தோடு நிறைவுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உபாதைகளால் அவதிப்படுபம் நடால் ஒலிம்பிக் போட்டிகளையும் ஏற்கனவே தவறவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது, இறுதியாக பிரஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் இடம் நடால் தோல்வியை தழுவி இருந்தமையும் சுட்டிக் காட்டத்தக்கது.
நடால் மீண்டும் எப்போது டென்னிஸ் களம்காண்பார் என்பதே ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்பாகும்.