அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
இம்மாத தொடக்கத்தில் அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், ஒரு டி போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்கான ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கீரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டர், ஷெல்டன் காட்ரெல், ரோஸ்டன் சேஸ் உள்ளிட்ட வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இதில் ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ ஆகியோர் இங்கிலாந்து டி20 தொடருக்கான அணியில் மட்டும் இடம்பிடித்துள்ளனர்.
ஒருநாள் அணி: கீரன் பொல்லார்ட் (கே), ஷாய் ஹோப், ஷமார் ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஸ்மித், ஒடியன் ஷெஃப்பர்ட், டெவன் தாமஸ்.
கூடுதல் வீரர்கள்: கீசி கார்டி, ஷெல்டன் காட்ரெல்
டி20 அணி: கீரன் பொல்லார்ட் (கே), நிக்கோலஸ் பூரன் , ஃபேபியன் ஆலன் (இங்கிலாந்து டி20 ஐ மட்டும்), டேரன் பிராவோ (இங்கிலாந்து டி20 ஐ மட்டும்), ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், ஷாய் ஹோப், அகெல் ஹொசைன், ஜேசன் ஹோல்டர், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெஃப்பர்ட், ஒடியன் ஸ்மித், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.
கூடுதால் வீரர்கள்: ஜெய்டன் சீல்ஸ், அல்ஸாரி ஜோசப், டெவோன்
#Abdh