அரிய உலக சாதனையை நழுவ விட்டார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஒலிம்பிக் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி ..!
பிரபலமான டென்னிஸ் நட்சத்திரமும் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஓர் அருமையான உலக சாதனை ஒன்றை நழுவவிட்டுள்ளார்.
இன்று(30) இடம்பெற்ற ஜெர்மனியின் Alexander Zverev உடனான ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளின் அரைஇறுதி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்விக்கு உள்ளானார்.
ஏற்கனவே இந்த ஆண்டில் மூன்று கிராண்ட்ஸ்லாம் மகுடங்களை வென்று, இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கம் வென்று சாதிப்பார் என ஜோகோவிச் மீது ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இந்த ஆண்டில் 3 கிராண்ட்ஸ்லாம் மகுடங்களை வென்றிகொண்டுள்ள ஜோகோவிச்் , அடுத்து இடம்பெறவிருக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளிலும் பட்டம் வெல்வாராக இருந்தால் அரிய உலக சாதனைக்கு சொந்தக்காரராகியிருப்பார்.
1988ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் ஸ்டெபி கிராப் 1988 ம் ஆண்டில் இடம்பெற்ற அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் மகுடம் சூடியதோடு அந்த ஆண்டில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.
ஸ்டெபி கிராப்பிற்கு பின்னர் ஒரே ஆண்டில் அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், ஒலிம்பிக் பதக்கத்தையும் சுவீகரித்த இன்னும் ஒரு வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைப்பதற்கான வாய்ப்பு இப்போது இல்லாமல் போயுள்ளது.
ஜெர்மனி வீரர்?? Alexander Zverev 1-6, 6-3, 6-1 என ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அவரது கனவை Alexander Zverev அரையிறுதியில் தோற்கடித்து இல்லாது செய்திருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்டெபி கிராப் மட்டுமே இந்த சாதனைக்கு சொந்தக்காரராக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.