அரிய சகலதுறையாளர்கள் சாதனைப் பட்டியலில் இணைந்த ஜடேஜா..!

அரிய சகலதுறையாளர்கள் சாதனைப் பட்டியலில் இணைந்த ஜடேஜா..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம் பெற்று வருகின்றது.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் முதல் நாளில் 183 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்து சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு ஆடிவரும் இந்திய அணி சார்பில் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா ஓர் புதிய சாதனைப் பட்டியலில் இணைத்துள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 2000 ஓட்டங்களையும் 200 விக்கெட்களையும் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஜடேஜா இணைந்தார்.

53 வது டெஸ்ட்டில் ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ளார், 42 டெஸ்ட்டில் இங்கிலாந்தின் ஐயன் பொத்தம் இந்த மைல்கல்லை எட்டினார், இதுவே உலக சாதனையாகவும் காணப்படுகின்றது.

2000 ஓட்டங்களையும் 200 விக்கெட்களையும் கைப்பற்றிய வீரர்கள் பட்டியல் ?

?42 – இயன் பொத்தம்

?50 – கபில் தேவ் / இம்ரான் கான்

?51 – ரவிச்சந்திரன் அஸ்வின்

?53 – ரவீந்திர ஜடேஜா