அரை இறுதியை எட்டியது இலங்கை லெஜெண்ட்ஸ் அணி…!

அரை இறுதியை எட்டியது இலங்கை லெஜெண்ட்ஸ் அணி…!

இந்தியாவில் இடம்பெற்றுவரும் வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு இருபதுக்கு இருபது தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி பார வெற்றி பெற்றது.

இதன்முலமாக இலங்கை லெஜெண்ட்ஸ் அணி அரை இறுதியை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் ஜோண்ட்டி ரோட்ஸ் தலைமையிலான தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணியை இலங்கை லெஜெண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.

போட்டியில் முதலில் ஆடிய தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணி 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இலங்கையின் பந்து வீச்சில் குலசேகர, ஹேரத், சனத் ஜெயசூரிய ஆகியோர் இவ்விரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு ஆடிய இலங்கை லெஜெண்ட்ஸ் அணி 13.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 92 ஓட்டங்களை பெற்று 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

அணித்தலைவர் டில்ஷான் 40 பந்துகளில் 50 ஓட்டங்களை விளாசினார்.ஆட்ட நாயகன் விருது ஹேரத் வசமானது.