அர்ஜுனாவிற்கு அழைப்பு விடுத்த நாமல் ராஜபக்ச.

இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமாறு 1996 இல் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்காவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாத்தறையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜபக்ஷ, நாட்டில் எந்த விளையாட்டுகளும் அரசியலில்லாமல் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டார்.

அர்ஜுனா ரணதுங்க லங்கா பிரீமியர் லீக் 2020 தொடர்பான பல மதிப்புமிக்க ஆலோசனைகளை அவருக்கு வழங்கியதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார், அவற்றில் பலவற்றை செயல்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

2015 க்குப் பிறகு கிரிக்கெட் பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர், 2015 க்கு முன்னர் உலகம் முழுவதும் மகிமைப்படுத்தப்பட்ட தேசிய கிரிக்கெட் அணி, அதன் பின்னர் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ, கிரிக்கெட் தொடர்பான தற்போதைய பின்னடைவுகளை சரிசெய்யவும், மேம்படுத்தவும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விளையாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அரசியலுக்கு இடமில்லை என்றும் உறுதியளித்தார்.

இந்தநிலையிலே இலங்கையின் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் களப்பணியில் தன்னுடன் கைகோர்க்குமாறு அர்ஜுனா ரணதுங்கவை அழைத்துள்ளார்.

Previous articleபெரும் தொகை கடனில் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் கழகங்கள்
Next article#PAKvSA-கராச்சியில் வெற்றிக்கனியை பறிக்குமா பாகிஸ்தான்.