அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக கருத்துரைத்த முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர்…!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு ஆசிப் அலியின் முக்கியமான கேட்சை தவறவிட்டதனால் எழுந்த விமர்சனங்களை விடுத்து அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் இளம் வேகப்பந்து வீச்சாளரைக் ட்ரோல் செய்தன, மற்றவர்கள் அவரது தவறுகளுக்காக அவரை அச்சுறுத்தினர்.

இருப்பினும் ஹபீஸ் ஒரு ட்வீட் மூலம் அர்ஷ்தீப்பை பாதுகாத்து ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டார்.

இந்திய அணி ரசிகர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள், விளையாட்டில் மனிதர்களாகிய நாம் தவறு செய்கிறோம். தயவு செய்து இந்த தவறுகளில் யாரையும் அவமானப்படுத்தாதீர்கள்” என்று ஹபீஸ் தனது ட்வீட்டில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.

 

அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக ஹர்பஜன் சிங்கும் தனது கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.