அறிமுக வீரரின் அசத்தல் பந்துவீச்சு- திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்..!

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான ஐந்தாவது இருபதுக்கு இருபது போட்டி நேற்று இரவு லாகூரில் நடைபெற்றது.

Toss வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. அந்த அழைப்போடு களம் இறங்கிய பாகிஸ்தான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பாகிஸ்தான் அணியில் 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 10 ரன்களை கடக்க முடிந்தது. முகமது ரிஸ்வான் நேற்றும் அரைசதம் அடித்து டி20 களத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டினார். ரிஸ்வான் 46 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் மார்க் வூட் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி மற்றும் சாம் கர்ரன் 23 ரன்களுக்கு தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இலக்கை துரத்த களம் இறங்கிய இங்கிலாந்து அணியால் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எளிதில் ரன் அடிக்க முடியவில்லை

அதன்படி இங்கிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் மொயீன் அலி 37 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். டேவிட் மலான் 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அறிமுக போட்டியில் ஆடிய அமீர் ஜமாலால் அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஹரிஸ் ரவூப் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அதேவேளை ஏனைய பந்துவீச்சாளர்கள் குறைந்த ஓட்டங்களில் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

முகமது நவாஸ் 1/9 (2)
முகமது வாசிம் 1/32 (4)
ஹாரிஸ் ரவுஃப் 2/41 (4)
ஷதாப் கான் 1/25 (4)
இப்திகார் அகமது 1/16(4)
அமீர் ஜமால் 1/13 (2)

இந்த வெற்றி மூலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5 ஆட்டங்கள் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் 3-2 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.