அலீசா ஹீலி அதிரடி ஆட்டம் – இங்கிலாந்து வெற்றி பெற 357 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது அவுஸ்திரேலியா!

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அஸ்திரேலிய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்களை குவித்தது.  அணியின் ஆரம்ப வீராங்கனைகளான அலீசா ஹீலியும், ஹெய்னசும் சிறப்பாக ஆடினர்.

ஹெய்ன்ஸ் 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பெத் மூனி அரை சதமடித்து 62 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் தூணாக நின்று பொறுப்புடன் விளையாடிய அலீசா ஹீலி சதமடித்து அசத்தினார். அவர் 138 பந்துகளில் 26 பவுண்டரி உள்பட 170  குவித்து ஆட்டமிழந்தார்.