அவிஷ்கவின் அதிரடியில் மீண்டும் ஒரு இறுதிப் போட்டியை எட்டிப்பிடித்தது ஜப்னா கிங்ஸ் அணி ..!

அவிஷ்கவின் அதிரடியில் மீண்டும் ஒரு இறுதிப் போட்டியை எட்டிப்பிடித்தது ஜப்னா கிங்ஸ் அணி ..!

இலங்கையில் இடம்பெற்றுவரும் LPL போட்டி தொடரின் இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் இரண்டாவது அணியை தேர்வு செய்யும் ஆட்டம் இன்று முடிவுக்கு வந்தது .

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திஸர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி எல்பிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதியை எட்டியது.

 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஜப்னா கிங்ஸ் அணிக்கு வழங்கியது, இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் வீரர்கள் அவிஷ்க, குர்பாஸ் ஆகியோர் ஆரம்ப விக்கட்டில் 122 ஓட்டங்களை முதல் விக்கெட்டுக்கு பகிர்ந்தனர்.

LPL தொடரின் முதலாவது சதத்தை அவிஸ்க பெர்னான்டோ உறுதி செய்து 100 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார், குர்பாஸ் 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார் .இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து ஜப்னா கிங்ஸ் அணி 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

211 எனும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது, சோல்ட் , டிக்வெல்ல ஆகியோர் அதிரடியாக ஆரம்பித்தாலும் 39 ஓட்டங்கள் பெற்றபோது முதல் விக்கட் பறிக்கப்பட்டது. தொண்ணூற்று ஆறு ஓட்டங்கள் என்ற நிலையில் 6 விக்கட்டுக்களை இழந்து தடுமாறிக் கொண்டிருக்க தனிமனிதனாக சாமிக்க அணிக்கு நம்பிக்கை கொடுத்தார் ,47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இறுதியில் போட்டியில் 23 ஓட்டங்களால் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்றது, இதன் மூலமாக எல்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் வரும் 23 ஆம் திகதி ஜப்னா அணி காலி அணியை சந்திக்கப் போகிறது. கடந்த முறையும் இவ்விரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை சாம்பியனான திஸர பெரேரா தலைமையிலான ஜப்னா அணி மீண்டும் சம்பியனாகுமா அல்லது கடந்த முறை தோல்வியை தழுவிய பானுக ராஜபக்ச தலைமையிலான காலி அணி சாம்பியன் ஆகிறதா என காத்திருக்கலாம்.