அவிஷ்க குணவர்தனவை பயிற்றுவிப்பாளர் ஆக்கியது ஸ்ரீலங்கா கிரிக்கெட்..!

அவிஷ்க குணவர்தனவை பயிற்றுவிப்பாளர் ஆக்கியது ஸ்ரீலங்கா கிரிக்கெட்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க குணவர்தனவை இலங்கை கிரிக்கட் பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளது.

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு இளையோர் பலரை கொண்டுவருவதில் மிகப் பெரும் பங்காற்றியவர் அவிஷ்க குணவர்தன  என்பது முக்கியமானது.

 ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடருக்குரிய ஆப்கானி்ஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக குணவர்தன ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இலங்கையின் 19 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.