அவிஷ்க பெர்னான்டோ : பாதுக்காக்கப்படவேண்டிய வைரம்

அவிஷ்க பெர்னான்டோ : பாதுக்காக்கப்படவேண்டிய வைரம்
.
நேற்று நடந்து முடிந்த LPL தொடரில் குஷால் மென்டிஸ் அதிகூடிய ஓட்டங்களை எடுத்திருந்தாலும் அவிஷ்க பெர்னான்டோவே LPL இன் தொடர் நாயகனாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதற்குக்காரணம் அவிஷ்க ஆடிய இரண்டு, மூன்று Match Winning Innings உம் அபாரமான களத்தடுப்புமே ஆகும். சில மாதங்களுக்கு முன்னர் முன் வரிசை துடுப்பாட்டக்காரரான அவிஷ்க மாஸ்டர் மைன்ட் மஹேலாவால் நான்காவது நிலைக்கு அனுப்பப்பட்டிருந்தார். அதன் பின்னர் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கிண்ணப்போட்டிகளில் மிக மோசமான ஒரு போர்மை வெளிக்காட்டியது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கை இழந்தவராகவும் காணப்பட்டார். 🙁
.
என்னைப்பொறுத்தவரை நான் அவிஷ்க பெர்னான்டோவை ஒரு ரோஹித் சர்மா போல பார்க்கிறேன்.

அரவிந்த, மகேலவுக்கு பிறகு இலங்கை அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த ஒரு வலதுகை துடுப்பாட்டக்காரராக சொல்லலாம். அவரை சரியாக பயன்படுத்தி உச்ச பயனை அடைந்தால் இலங்கை அணிக்கு நல்ல ஒரு ஆரம்பம் கிடைக்கும். பாட் போய்ஸ் லீடர் குணதிலகவும் கம்பேக் கொடுத்தால் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்டம் வின்டேஜ் நினைவுகளை மீட்டுத்தரும் என நம்புகிறேன். அவிஷ்கவின் இந்த கம்பேக் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
.
கடைசியாக ஆட்டத்தொடர் நாயகன் விருதை பெற்ற பின்,

வர்ணணையாளர் : ‘அவிஷ்க நீங்கள் ஓப்பனிங் பட்ஸ்மனாக களமிறங்குவதையா இல்லை மிடில் ஓடர் பட்ஸ்மனாக இறங்குவதையா விரும்புகிறீர்கள்?

அவிஷ்க : ‘ஓப்பனிங் பட்ஸ்மனாக இறங்குவதையே விரும்புகிறேன்’ <3

#Iroshan