அவுஸ்திரேலியன் பகிரங்க டென்னிஸ்- பார்வையாளர் அனுமதி விபரம்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலியன் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் பெப்ரவரி 8 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக பார்வையாளரை அனுமதிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், இப்போது முதல் 8 நாள் போட்டிகளுக்கு 30,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் காலிறுதி ஆட்டம் வரைக்கும் 25,000 பேர்வரையில் அனுமதிக்கப்படவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் இப்போது புதிய வைரஸ்கள் தோற்றாளர்கள் இல்லாமல் 24 நாட்கள் சென்றுவிட்டன, ஆஸ்திரேலியாவுக்கு வந்த அனைத்து வீரர்களும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருந்தது.

1,000 க்கும் மேற்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து எட்டு பேர் மட்டுமே தோற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

எதுஎவாராயினும் பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஆஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகள் வெற்றிகரமாக நடந்தேற வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.