அவுஸ்திரேலியாவின் BBL போட்டிகளில் மகுடம் சூடியது சிட்னி சிக்ஸர்ஸ்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற BBL எனப்படும் பிக் பாஸ் லீக் போட்டிகளின் இன்றைய இறுதி போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி சாம்பியன் மகுடம் சூடியது.

சிட்னியில் இடம்பெற்ற இன்றைய இறுதி போட்டியில் மொய்சஸ் ஹென்றிக்ஸ் தலைமையிலான சிட்னி சிக்ஸர்ஸ், அஸ்டோன் டேர்னர் தலைமையிலான பேர்த் ஸ்கார்சேர்ஸ் அணியும் பங்கெடுத்தன.

முதலில் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு ஆடிய பேர்த் ஸ்கார்சேர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

போட்டியில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி 3 வது தடவையாக BBL கிண்ணத்தை கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக ஜேம்ஸ் வின்ஸ , தொடர் நாயகனாக ஜோஷ் பிலிப்ஸ் ஆகியோர் தேர்வானார்.