அவுஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்தது பங்களதேஷ் ,முதல் போட்டியில் இலகுவான வெற்றி..!
பங்களாதேஷ் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்ரேலிய, பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான 1 வது டுவென்டி போட்டி நிறைவுக்கு வந்தது.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஸ் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.
132 எனும் இலகுவான இலக்குடன் ஆடிய அவுஸ்திரேலிய அணி முதல் 3 விக்கெட்டுகளை வெறுமனே 11 ஓட்டங்களை பெற்ற நிலையில் இழந்தது.
இறுதியில் அவுஸ்ரேலியாவால் 108 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
இறுதியில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்று பங்களாதேஸ் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.